ADDED : ஆக 06, 2025 10:08 PM
உடுமலை; உடுமலை வட்டாரத்தில், விவசாயிகளுக்கு தேவையான மக்காச்சோள விதைகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
உடுமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் தேவி கூறியதாவது: உடுமலை வட்டார வேளாண்துறையில் உள்ள, மூன்று வேளாண் கிடங்குகளிலும் விவசாயிகளுக்கு கோ.எச்.எம்.8 என்ற மக்காச்சோளம் விதை தேவையான அளவு இருப்பு உள்ளது. மேலும் மக்காச்சோளம் பயிர் சாகுபடியை மேம்படுத்தும் வகையில், மக்காச்சோளம் செயல் விளக்க திடல், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில், பங்கேற்க அக்ரிஸ் நெட் விவசாயிகள் பதிவு செய்து பயனடையலாம்.
மேலும் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களையும் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். தற்பொழுது பதிவு செய்து கொண்டால், செயல் விளக்க திடல் இடுபொருள்கள் வந்த உடனே விநியோகம் செய்யப்படும்.
பதிவு செய்வதற்கு பெயர், மொபைல் எண், போட்டோ, இருப்பிடம், அடங்கல், வங்கி கணக்கு ஆகியவற்றுடன் பதிவு செய்யலாம்.
இவ்வாறு, தெரிவித்தார்.