ADDED : அக் 17, 2025 11:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலை வேளாண்துறை சார்பில், விவசாயிகளுக்கு மானிய விலையில், வீரிய ஒட்டு ரக மக்காச்சோளம் விதை மற்றும் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது.
உடுமலை வேளாண்மைத்துறை சாளையூர் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில்,
விவசாயிகளுக்கு தேவையான, வீரிய ஒட்டு மக்காச்சோளவிதை, ஜெல், நானோ யூரியா ஆகியவை மானிய விலையில் விற்பனைக்கு தயாராக உள்ளது.
தற்போது பருமழை துவங்கியுள்ள நிலையில், மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகள் இதனை வாங்கி பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கு சிட்டா, ஆதார் அட்டை நகல் பேங்க் பாஸ்புக் நகல், ஆகியவற்றுடன் வேளாண்துறை அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு, உதவி வேளாண்மை அலுவலர்கள் வைரமுத்து 98659 39222, மார்க்கண்டன் 98949 36328 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.