/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மக்காச்சோள வியாபாரியிடம் ரூ.5.80 லட்சம் மோசடி
/
மக்காச்சோள வியாபாரியிடம் ரூ.5.80 லட்சம் மோசடி
ADDED : ஆக 09, 2025 11:40 PM
திருப்பூர் : திருப்பூர், பல்லடம் ரோடு, ஸ்ரீ நகரை சேர்ந்தவர் பிரவீன், 28. வெளிமாநிலங்களுக்கு மக்காச்சோளம் வாங்கி, கோழிபண்ணைகளுக்கு வியாபாரம் செய்து வருகிறார். பிரவீனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன், பேஸ்புக்கில் விளம்பரம் வந்தது. அதில், ராகேஷ் சிங் என்பவர் மக்காச்சோ ளம் விற்பனைக்கு வைத்திருப்பதாக கூறி மொபைல் போன் எண்ணை பகிர்ந்திருந்தார்.
இதனை பார்த்த பிரவீன் அவரை, தொடர்பு கொண்டு பேசினார். 7.30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 35 டன் மக்காச்சோளம் இருப்பதாகவும், 80 சதவீதம் முன்பணம் கொடுத்து, லாரியை அனுப்பி விட்டால், மக்காச்சோளத்தை ஏற்றி விடுவதாக கூறினார். இதனை நம்பிய பிரவீன், குறிப்பிட்ட வங்கி கணக்குக்கு, 5 லட்சத்து, 80 ஆயிரம் ரூபாயை அனுப்பி விட்டு, லாரியை அனுப்ப தொடர்பு கொண்ட போது, மொபைல் போன் சுவிட்ச் ஆப் வந்தது. ஏமாற்றப்பட்டதை அறிந்த பிரவீன் திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.