ADDED : ஏப் 26, 2025 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலக மலேரியா தினம் ஏப்., 25ல் பின்பற்றப்படுகிறது. இதையொட்டி, மலேரியாவைக் கட்டுப்படுத்தவும், அதை முற்றிலும் ஒழிக்கும் விதமாகவும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
அவ்வகையில், வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது மக்களுக்கு மலேரியா நோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியும், உறுதிமொழி ஏற்பும் நடந்தது. வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், மேற்பார்வையாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.