ADDED : ஜூலை 01, 2025 11:40 PM
திருப்பூர்,; திருப்பூர், தாராபுரம் ரோடு, கல்லாங்காட்டை சேர்ந்தவர் ரவிக்குமார், 25. இவர் மீது அடிதடி தகராறு உள்ளிட்ட பல்வேறு வழக்கு உள்ளது.
இவர், 2021ம் ஆண்டு முதல் போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வரும் ரவுடி பட்டியலில் உள்ளார். நேற்று முன்தினம் தெற்கு போலீசில் பதியப்பட்ட கடத்தல் வழக்கு ஒன்றில் ஆஜராக ரவிக்குமார் திருப்பூர் மாவட்ட கோர்ட்டுக்கு சென்றார். உள்ளே நுழையும் போது, போலீசார் சோதனை செய்தனர். அப்போது, வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனை தொடர்ந்து, கோர்ட்டுக்குள் சென்ற பின்னரும், அவரின் நடவடிக்கை சரியில்லாமல் இருந்தது. விசாரித்த போது போதையில் இருந்தது தெரிந்தது. தொடர்ந்து விசாரிக்க முயன்ற எஸ்.ஐ., உள்ளிட்ட போலீசாரிடம் இருந்து தப்பி சென்றார். அவரை விரட்டி சென்ற போது, கீழே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து பிடித்தனர்.
உடனே, போலீசாரை தாக்கி தப்பிக்க முயன்றார். அவரை பிடித்து வீரபாண்டி போலீசில் ஒப்படைத்தனர். புகாரின் பேரில், ரவிக்குமாரை வீரபாண்டி போலீசார் கைது செய்தனர்.