/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
1.3 டன் ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது
/
1.3 டன் ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது
ADDED : ஜூன் 13, 2025 10:55 PM
திருப்பூர்; உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், திருப்பூர், பெருந்தொழுவு ரோடு, சத்யா காலனி பகுதியில் சோதனை நடத்தினர்.
இன்ஸ்பெக்டர் ராஜகுமார், எஸ்.ஐ., பிரியதர்ஷினி மற்றும் போலீசார் ஒரு இடத்தில் சோதனை செய்த போது, அப்பகுதியில், ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிந்து, 1,300 கிலோ அரிசியை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், திருமுருகன்பூண்டி பகுதியை சேர்ந்த கவியரசன், 23, ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து, விற்பனைக்கு கொண்டு செல்ல முயன்றது தெரிந்தது.
இதற்காக, அவர் சத்யா காலனி, ராமையா கவுண்டம்பாளையம், பெருந்தொழுவு ஆகிய பகுதியில் வீடுகளில், குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதை வடமாநில தொழிலாளர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரிந்தது. அவரைக் கைது செய்த போலீசார், 1,300 கிலோ ரேஷன் அரிசி மற்றும் ஒரு பைக்கை பறிமுதல் செய்தனர்.