ADDED : பிப் 01, 2025 12:20 AM
திருப்பூர்; ஊத்துக்குளி, ரெட்டி பாளையம் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக, உணவு பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் ராஜகுமார், எஸ்.ஐ.,க்கள் குப்புராஜ், பிரியதர்ஷினி உள்ளிட்ட குழுவினர் சோதனை செய்தனர். ரெட்டிபாளையம் அய்யப்பமுத்தையம் காடு பகுதியில் ஒரு இடத்தில், 1,150 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.
விசாரணையில் திருப்பூர், அய்யம்பாளையத்தை சேர்ந்த சண்முகம், 36, என்பவர் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது.
ஊத்துக்குளி பகுதியில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை, வாங்கி வைத்து வடமாநில தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. போலீசார் அவரைக் கைது செய்து அரிசி மூட்டை மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.