/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மூதாட்டியிடம் தாலிக்கொடி பறித்த ஆசாமி சிக்கினார்
/
மூதாட்டியிடம் தாலிக்கொடி பறித்த ஆசாமி சிக்கினார்
ADDED : மார் 25, 2025 06:37 AM
வெள்ளகோவில்; மூலனுார் பாறைக்கடை பகுதியில் உள்ள, ஆண்டிக்காட்டு தோட்டத்தில் வசிப்பவர் செல்லாத்தாள், 72; விவசாயி. தோட்டத்தில் விளைவிக்கப்பட்ட காய்கறியை, அதேபகுதியில் விற்பனை செய்து வருகிறார்.
கடந்த, 2ம் தேதி மாலை, காய்கறி வாங்குவதுபோல் இரண்டு நபர்கள் வந்தனர். பேச்சு கொடுத்தபடி இருந்தவர்கள், திடீரென செல்லாத்தாள் அணிந்திருந்த, ஐந்தரை சவரன் தாலிக்கொடியை பறித்துக்கொண்டு தப்பியோடினர்.
இதுகுறித்து மூலனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். 'சிசிடிவி' பதிவுகளை தொடர்ந்து ஆய்வு செய்த போது, 'டூவீலரில்' வந்து தாலிக்கொடியை பறித்துச்சென்ற நபர்களை கண்டுபிடித்தனர்.
அதில், மதுரை - அலங்காநல்லுாாரை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ரதின், 21 என்பவரை கைது செய்து, மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில் சிறையில் அடைத்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.