/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மோசடி ஆசாமியை நம்பி ரூ.90 லட்சம் ஏமாந்த நபர்
/
மோசடி ஆசாமியை நம்பி ரூ.90 லட்சம் ஏமாந்த நபர்
ADDED : மே 12, 2025 03:45 AM
திருப்பூர்; திருப்பூரில் தங்கம் முதலீடு மூலமாக கூடுதல் லாபம் பெறலாம் என கூறி, 90 லட்சம் ரூபாயை மோசடி கும்பல் கைவரிசை காட்டியது.
திருப்பூர், ஊத்துக்குளி ரோட்டை சேர்ந்த 37 வயது நபர், கடந்த பிப்., 18ம் தேதி வாட்ஸ்-ஆப் மூலம், ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அதிகமாக விற்பனை செய்ய கூடிய பங்குகளை வாங்குவதன் மூலம் அதிகப்படியான லாபம் சம்பாதிக்கலாம் எனகூறினார்.
இதையடுத்து, குழுவில் இணைக்கப்பட்டார். தங்கத்தில் முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபத்தை எடுக்கலாம் என கூறி, அதற்கான விபரங்களை பகிர்ந்திருந்தார்.
இதை நம்பிய வாலிபர், 17 தவணைகளாக, 90 லட்சம் ரூபாயை முதலீடு செய்தார். பின் கிடைத்த லாபத்தை எடுக்க முயன்ற போது, கூடுதலாக, 60 லட்சம் ரூபாயை கட்டுமாறு கூறினர். பின், ஏமாற்றப்பட்டதை அறிந்து, திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.