ADDED : ஜூன் 01, 2025 12:56 AM
திருப்பூர்: திருப்பூர், திருமுருகன்பூண்டி போலீஸ் எஸ்.எஸ்.ஐ., மருதப்பாண்டியன், 50. ஆயுதப்படை போலீஸ்காரர் குணசுதன், 30. இருவரும், கடந்த ஆண்டு ஆகஸ்டில் ரோந்து சென்றபோது, கோவை - சேலம் பைபாஸ் ரோட்டில் ரோட்டோரம் நின்ற காரில் இருந்தவர்களிடம், 7,000 ரூபாய், ஐந்து பீர் பாட்டில், எலக்ட்ரானிக் சிகரெட் மற்றும் 'இயர் பேடு' ஆகியவற்றை எடுத்துச் சென்றனர்.
தகவலறிந்த அப்போதையை கமிஷனர் லட்சுமி, இருவரையும், 'சஸ்பெண்ட்' செய்தார். தற்போதைய கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவில், துணை கமிஷனர் ராஜராஜன் விசாரித்து, ஒழுங்கீனமாக நடந்து கொண்ட மருதப்பாண்டியனுக்கு கட்டாய ஓய்வு கொடுத்தும், ஆயுதப்படை போலீஸ்காரர் குணசுதனை பணி நீக்கமும் செய்து உத்தரவிட்டார்.
மற்றொரு வாகன தணிக்கையில், 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கி சஸ்பெண்டில் உள்ள ஆயுதப்படை போலீஸ்காரர் பிரேம்குமாரும், பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.