/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மங்கள வேல் வாகனம் மாநகரில் ஊர்வலம்
/
மங்கள வேல் வாகனம் மாநகரில் ஊர்வலம்
ADDED : டிச 14, 2024 11:35 PM

திருப்பூர்:திருப்பூர் மாநகரில் மக்கள் வழிபாட்டுக்காக மங்கள வேல் வாகனம் வலம் வந்தது.
ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், வேல் வழிபாடு நிகழ்ச்சி கடந்த மாதம் துவங்கியது. ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமையில் வேல் வழிபாடு நடைபெற்று வருகிறது.
கொங்கு மண்டலத்தின் ஏழு திருத்தலங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட மங்கள வேல், வாகனத்தில் வைத்து, திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் மக்கள் தரிசனத்துக்காக கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாநகரில் நேற்று முதல் மக்கள் தரிசனத்துக்காக மங்கள வேல் வாகனம் வந்தது. கருவம்பாளையம், கே.வி.ஆர்., நகர், பகவதி அம்மன் கோவில் அருகில் வாகனம் வந்தது.
காடேஸ்வரா சுப்ரமணியம் பூஜை செய்து வாகனத்தை துவக்கி வைத்தார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் செந்தில்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.