/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவில் நிதி கையாடல்? போலீசில் புகார் மனு
/
கோவில் நிதி கையாடல்? போலீசில் புகார் மனு
ADDED : செப் 20, 2024 10:51 PM
திருப்பூர் :நல்லுாரில் உள்ள விநாயகர் கோவிலில், கோவில் நிதி குறித்த கணக்குகளை ஒப்படைக்காமல், மிரட்டல் விடுத்தவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
திருப்பூர், நல்லுார், காஞ்சி நகர் பகுதியில், ராமமூர்த்தி என்பவர் வழங்கிய இடத்தில், அப்பகுதி மக்கள் ஸ்ரீமகா கணபதி கோவில் நிர்மாணித்து, 2008ம் ஆண்டு முதல் வழிபாடு நடத்தி வருகின்றனர். கோவில் நிர்வகிக்கும் பணியில் அப்பகுதியைச் சேர்ந்த நான்கு பேர் இடம் பெற்றிருந்தனர். அப்பகுதியினர் சேர்ந்து கோவிலில் சீட்டும், கோவில் பராமரிப்பு உள்ளிட்டவற்றுக்கு நிதியும் வழங்கியுள்ளனர்.
கடந்தாண்டு கோவில் கணக்கு வழக்குகளை ஆய்வு செய்த போது அதில் பல்வேறு குறைபாடுகள் இருந்துள்ளது. இது குறித்து கேட்ட போது, உரிய பதில் தராமலும், மிரட்டலும் விடுத்தனர். இதனால், ராமமூர்த்தி தலைமையில் அப்பகுதியினர், நேற்று நல்லுார் போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்தில், அளித்த புகாரின்பேரில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.