/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மனுபாக்கர், சரப்ஜோத்சிங், ஸ்வப்னில் காட்டிய வழி; சுடத் தெரிந்தால் பதக்கங்கள் 'சுடலாம்'
/
மனுபாக்கர், சரப்ஜோத்சிங், ஸ்வப்னில் காட்டிய வழி; சுடத் தெரிந்தால் பதக்கங்கள் 'சுடலாம்'
மனுபாக்கர், சரப்ஜோத்சிங், ஸ்வப்னில் காட்டிய வழி; சுடத் தெரிந்தால் பதக்கங்கள் 'சுடலாம்'
மனுபாக்கர், சரப்ஜோத்சிங், ஸ்வப்னில் காட்டிய வழி; சுடத் தெரிந்தால் பதக்கங்கள் 'சுடலாம்'
ADDED : ஆக 04, 2024 05:13 AM

பிரான்ஸ் தலைநகர், பாரீஸில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று, நம் நாட்டுக்கு, துப்பாக்கி சுடுதலில் மூன்று வெண்கலப்பதக்கங்கள் வெல்வதற்கு காரணமாக மனுபாக்கர், சரப்ஜோத் சிங், ஸ்வப்னில் ஆகியோர் இருந்தனர். துப்பாக்கி சுடுதலில் இந்தியா சாதித்து வருவதால், மாவட்ட துப்பாக்கி சுடுதல் வீரர், வீராங்கனையர் உட்பட, துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று வருவோர் கூட ஆர்வமும், உற்சாகமும் அடைந்துள்ளனர்.
திருப்பூர், மங்கலம் ரோடு, சின்னாண்டிபாளையத்தில் உள்ள பிளாட்டோஸ் ரைபிள்ஸ் கிளப்பில், பலரும் பயிற்சி பெற்று வருகின்றனர்.
மன அமைதியை தரும்
கார்த்தி தனபால்: ரைபிள்ஸ் கிளப்பில் பயிற்சி பெற்று வருகிறேன். துப்பாக்கி சுடுதலில் புதிய அத்தியாயத்தை இந்தியா படைத்து வருகிறது. ஒலிம்பிக் துவக்கத்திலேயே கிடைத்த வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது. என் சிறுவயதில் இருந்து துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் அதிகம். பள்ளியில் என்.சி.சி.,யில் இருந்த போது, துப்பாக்கியை கையில் பிடிக்க கற்றுக்கொண்டேன். மாநில, தேசிய போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று, பரிசும் பெற்றுள்ளேன். 'கேலோ இந்தியா' அடுத்தடுத்த நிலையிலான போட்டிகளில் பங்கேற்க தயாராகி வருகிறேன். துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்பது, மனதை ஒருநிலைப்படுத்தும்; மன அமைதியை தரும்.
பெரும் உத்வேகம்
தனுஷ்கா, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை:
பெண்கள் ஒலிம்பிக்கில் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாகியுள்ளார், மனுபாக்கர். கவனம் சிதறாமல், ஒரு நேர்கோட்டில் இலக்கை குறிவைத்து புள்ளியெடுத்து வரலாற்று சாதனை படைத்துள்ளார். துப்பாக்கி சுடுதலில் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று வரும் நான், பாட்டியாலாவில் அடுத்த தேசிய சுற்று தேர்வு போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். இந்த நேரத்தில், ஒலிம்பிக் நடப்பது, இந்திய வீராங்கனை துப்பாக்கி சுடுதலில் பதக்கத்தை வென்றது பெரும் மகிழ்ச்சியும், பெருமையும் தருகிறது. எனக்கு பெரும் உத்வேகமாக அமைந்துள்ளது.
மனுபாக்கர், சரப்ஜோத் சிங், ஸ்வப்னில் போல சாதிக்க தயாராயிட்டீங்களா, நீங்க!