/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மண் பாதையை தார்ரோடாக மாற்றணும்! பல கிராம மக்கள் எதிர்பார்ப்பு
/
மண் பாதையை தார்ரோடாக மாற்றணும்! பல கிராம மக்கள் எதிர்பார்ப்பு
மண் பாதையை தார்ரோடாக மாற்றணும்! பல கிராம மக்கள் எதிர்பார்ப்பு
மண் பாதையை தார்ரோடாக மாற்றணும்! பல கிராம மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 11, 2025 09:33 AM
உடுமலை : பள்ளபாளையம் கிராமத்திலிருந்து அரசு கலைக்கல்லுாரி வரை, கால்வாய் கரையிலுள்ள, மண் பாதையை தார்ரோடாக மேம்படுத்த வேண்டும் என, பல கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பி.ஏ.பி., பாசனத்திட்டத்தில், உடுமலை கால்வாயானது, திருமூர்த்தி அணையிலிருந்து துவங்கி, நகரை ஒட்டியுள்ள கிராமங்கள் வழியாக செல்கிறது.
இந்த கால்வாயில், கண்காணிப்பு உட்பட பணிகளுக்காக, பொதுப்பணித்துறை சார்பில், முன்பு பாதை பராமரிக்கப்பட்டு வந்தது. இப்பாதையை, அப்பகுதி விவசாயிகளும், சுற்றுப்பகுதி கிராம மக்களும் போக்குவரத்துக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக, பள்ளபாளையத்தில் இருந்து போடிபட்டி எல்லை வழியாக, உடுமலை அரசு கலைக்கல்லுாரி வரை, இப்பாதையை நாள்தோறும் நுாற்றுக்கணக்கான வாகன ஓட்டுநர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
விவசாய விளைபொருட்களையும், இப்பாதை வழியாக நகர சந்தைகளுக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு, அதிகளவு பயன்படுத்தப்படும் பாதை, பல ஆண்டுகளாக மேம்படுத்தப்படாமல் உள்ளது. இருபுறங்களிலும், புதர் மண்டி, குப்பைக்கிடங்காக மாற்றப்பட்டுள்ளது.
இப்பாதையானது, அரசு கலைக்கல்லுாரி முதல் எஸ்.வி., புரம் வரை, தார்ரோடாக மேம்படுத்தப்பட்டு, பல கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
அதே போல், பள்ளபாளையத்திலிருந்து அரசுக்கல்லுாரி வரையிலான பாதையையும் மேம்படுத்த, தொடர்ந்து கோரிக்கை விடப்பட்டு வருகிறது. மேம்பாட்டுப்பணிகளை செய்தால், தெற்குப்பகுதி கிராம மக்கள், நகருக்குள் வர, மாற்றுப்பாதையும் கிடைக்கும்.
இது குறித்து பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை சார்பில், ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கவும் அப்பகுதி கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

