/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மரக் 'கொலை'; தர வேண்டும் 'மிகப்பெரும் விலை'
/
மரக் 'கொலை'; தர வேண்டும் 'மிகப்பெரும் விலை'
ADDED : பிப் 23, 2024 12:08 AM

திருப்பூர்;திருப்பூரில் சாலை விரிவாக்கப்பணி உள்பட வளர்ச்சிப்பணிகள் என்ற போர்வையில், ஏராளமான மரங்கள், எந்தவித அனுமதியோ, விதிகளையோ பின்பற்றாமல், அடியோடு வெட்டிச்சாய்க்கப்படுகின்றன. இதைப் பார்த்துக் கண்ணீர் சொரியும் பூமித்தாய்க்கு, நாம் எதிர்காலத்தில் இதற்கான 'விலை'யைக் கொடுக்க வேண்டியிருக்கும்!
மனிதன் வாழ ஏற்ற சூழலாக இருக்கும் மரங்கள் குறைந்ததால் மனிதன் வாழ தேவையான 'ஆக்சிஜனுக்கு' திண்டாட வேண்டிய நிலையை நோக்கி தற்போது மறைமுகமாக நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றோம். நகரங்களில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால் 'கார்பன் மோனாக்சைடு' தாக்கம் தீவிரமடைந்து விட்டது. இதனை தடுக்க கூடிய மரங்கள் அன்றாடம் ஏதாவது இடத்தில் வெட்டி சாய்க்கப்பட்டு வருகிறது.
அடுத்தடுத்து
அட்டூழியம்
திருப்பூர் - மங்கலம் ரோட்டில் கடந்த சில மாதங்களாக ரோடு விரிவாக்கப் பணி, கால்வாய் பாலம் அமைக்கும் பணி என, பல பணிகள் நடக்கிறது. இப்பணிகளுக்காக, எவ்வித அனுமதியில்லாமல், 15 ஆண்டு, 25 ஆண்டு என, பல ஆண்டுகளாக நிழல் கொடுத்து நம்மை பாதுகாத்து வந்த மரங்களை வெட்டி சாய்த்து வருகின்றனர்.மங்கலம் ரோட்டில் மட்டும் அல்ல. மாநகரின் பல இடங்களில் வளர்ச்சி திட்டப்பணிகள் என்ற பெயரில், கணக்கில் வராத மரங்களையும் அடியோடு வெட்டி வரும் கொடூரமான நிகழ்வு அரங்கேறி வருகிறது என்று இயற்கை ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுபோன்ற விதிமீறல்களால் ஆண்டுக்கணக்காக நிழல் வந்த மரங்கள் வெட்டப்பட்டு மாயமாகி வருகிறது. மாவட்ட நிர்வாகம் தலையீட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
---
திருப்பூர் குமரன் கல்லுாரி அருகில், எந்த விதிமுறையையும் பின்பற்றாமல் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.