/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அ.ம.மு.க., சார்பில் மராத்தான் போட்டி
/
அ.ம.மு.க., சார்பில் மராத்தான் போட்டி
ADDED : டிச 09, 2024 05:01 AM

அனுப்பர்பாளையம், : திருப்பூரில் மாநகர் மாவட்ட அ.ம.மு.க., சார்பில், இதன் பொதுச்செயலாளர் தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு, 'பெண்ணிற்காக' என்ற மராத்தான் போட்டி நேற்று நடந்தது. காலேஜ் ரோடு சவுடாம்பிகா மண்டபம் முன் துவங்கி, 6 கி.மீ., துாரம் நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் விசாலாட்சி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முன்னாள் அமைச்சர் சண்முகவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், பொதுமக்கள் பங்கேற்றனர். ஆறு பிரிவுகளாக நடந்த போட்டியில் ஒவ்வொரு பிரிவுக்கும் முதல் பரிசாக தலா 10 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக ஐந்தாயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக மூன்றாயிரம் ரூபாய், முதல் 20 இடங்களை பிடித்தவர்களுக்கு குக்கர் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் உள்ளிடவை வழங்கப்பட்டன.
வெற்றி பெற்றவர்களுக்கு பொதுச்செயலாளர் தினகரன் பரிசுகள் வழங்கி பேசுகையில், ''வருங்கால தமிழகத்தை வழி நடத்த கூடியவர்கள் நீங்கள்.
போதைப்பழக்கத்திற்கு அடிமையாகாமல், குடும்பத்தினரை பாதுகாத்து சீரோடும் சிறப்போடும் உயர்ந்த நிலையை அடைய வேண்டும்''என்றார்.