sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மக்கன் நலன் காக்கும் மாரியம்மன்!

/

மக்கன் நலன் காக்கும் மாரியம்மன்!

மக்கன் நலன் காக்கும் மாரியம்மன்!

மக்கன் நலன் காக்கும் மாரியம்மன்!


ADDED : ஆக 09, 2024 02:22 AM

Google News

ADDED : ஆக 09, 2024 02:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் அருகேயுள்ளது ஆண்டிபாளையம் மாரியம்மன் கோவில். பெரியாண்டிபாளையம், சின்னாண்டிபாளையம், குளத்துப்புதுார், குள்ளேகவுண்டம்புதுார், குளத்துப்புதுார் உள்ளிட்ட கிராம மக்களுக்கு ஊர் மாரியம்மன் கோவிலாக திகழ்கிறது.

கடந்த, 2016ல் கும்பாபிேஷகம் சிறப்பாக நடந்துள்ளது. ஒவ்வொரு பவுர்ணமியிலும், உற்சவர் அம்பாள், கோவிலை சுற்றி, நிரமனை வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அமாவாசை நாளில் தொடர் சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடக்கிறது.

கோவிலில் உள்ள, 80 அடி சிறிய கிணற்றில், கோவில் உருவான காலம் தொட்டு, 350 ஆண்டுகளாக தண்ணீர் தொடர்ந்து இருந்து வருகிறது; பயன்பாட்டிலும் உள்ளது. அதிசயத்தக்க நிகழ்வாக உள்ளது.அம்மை நோய் குணமாக அம்மனை வேண்டி பலரும் வருகின்றனர்.

தீர்த்தம், திருநீறு கொடுக்கப்படுகிறது. அதனை வாங்கி சென்று, அருந்தினால், உடலில் பூசிக்கொண்டால், அம்மை குணமாகிறது. 3.5 அடியில், நின்ற கோலத்தில், சாந்த சோருபியாக, கிழக்கு பார்த்த அம்மன் காட்சித்தருகிறார். வலது கையில் கத்தி, சூலமும், இடது கையில் உடுக்கையும் வைத்துள்ள, சக்தி வாய்ந்த அம்மன், மாரியம்மன்.

கேட்கும் வரம் தரும் அம்பாள் என்பதால், புதியதாக இடம் வாங்க, வீடு கட்ட, தொழில் துவங்க, புதியதாக போர்வெல் துவங்க, தோட்டம் வாங்க, செவ்வாய், வெள்ளி அம்மனிடம் பக்தர்கள் பூ கேட்கின்றனர். நல்ல 'உத்தரவு' கிடைத்து, நிலம் வாங்கி, வீடு கட்டி, புதுமனை புகுவிழாவுக்கு அம்மனுக்கு பத்திரிக்கை வைத்து அழைக்கின்றனர்; அம்மன் சென்று சகல, சவுபாக்கியத்துடன் இருக்க ஆசீர்வாதமும் வழங்குகிறார்.

பக்தர்களும் தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன், தங்களால் இயன்றதை கோவிலுக்கு செய்து விடுகின்றனர். கோவில் முகப்பில், வெளிபிரகாரத்தில் வலதுபுறம் நீலி, இடதுபுறம் நீலகண்டி அருள்பாலிக்கின்றனர். உள்பிராகரத்தில் முருகன், விநாயகர் சிலைகள் உள்ளது. சஷ்டி, சதுர்த்தி நாட்களில் சிறப்பு பூஜைகள் உண்டு. வெளிபிராகத்தில் அம்மனுக்கு வலதுபுறம் ஸ்ரீமஹேஸ்வரி, பின் ஸ்ரீ வைஷ்ணி, இடதுபுறம் ஸ்ரீ துர்க்கையம்மன் அருள்பாலிக்கின்றனர்.

* கார்த்திகை மாதம், 15 நாள் பூச்சாட்டு, பொங்கல் விழா விமரிசையாக நடக்கிறது.

* பொங்கல் நடக்கும் நாட்களில், சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, வெளியூரில் இருந்து வந்து ஆயிரக்கணக்கானோர், தங்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

* பொங்கல் விழாவின் சிறப்பாக, படைக்கலம் எடுத்து வரும்முன், குதிரையிடம் அனுமதி கேட்பது பல ஆண்டுகளகாக கோவிலில் நடைபெற்று வருகிறது.

எங்கே உள்ளது...

மாரியம்மன் கோவில், பெரியாண்டிபாளையம், மங்கலம் ரோடு, திருப்பூர்.அமைவிடம்: திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து ஐந்து கி.மீ., மங்கத்தில் இருந்து ஏழு கி.மீ., துாரத்தில் கோவில் உள்ளது.தொடர்புக்கு: 98431 72294



நோய் தீர்க்கும் அம்மன்

அதீத கை, கால், வலி, வீக்கம் காரணமாக, குணமடையாமல் அவதிப்படுவோர் மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைகளுக்கு போகும் முன், அம்மனை வேண்டிச் செல்கின்றனர். கை, கால்வலி குணமாகி, நோயில் இருந்து மீண்டு வந்த பின் 'உருவாரம்' (மண்ணால் செய்யப்பட்ட பொம்மை) வாங்கி வைத்து வழிபடுகின்றனர். நுாறு ஆண்டுகளுக்கு மேலாக இவ்வழக்கம் தொடர்கிறது. அனைத்து ஆடி வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.








      Dinamalar
      Follow us