ADDED : மே 02, 2025 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; துளசி ராவ் வீதி ஆதி சக்தி மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா நேற்று நடைபெற்றது.
திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட், துளசிராவ் வீதி, ராம்ராஜ் நகரில் ஆதி தெய்வம் சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், பொங்கல் பூச்சாட்டு விழா கடந்த, 29ம் தேதி துவங்கியது. அதையடுத்து பூங்கரகம் அழைத்தலும், நேற்று முன்தினம் பூ மதித்தல் மற்றும் சக்தி கரகம் எடுத்தலும் நடந்தது. நேற்று பொங்கல் விழாச் சிறப்பாக நொய்யலிலிருந்து அம்மன் அழைப்பு நிகழ்ச்சியும், அதையடுத்து பொங்கல் வைப்பு நிகழ்ச்சியும் நடந்தது. மாவிளக்கு எடுத்தல், பூவாரி விடுதலும் நடைபெற்றது.
பொங்கல் விழா முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை ஆகியன நடந்தன.