/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா; குட்டை திடல் ஏலம் ஒத்திவைப்பு
/
மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா; குட்டை திடல் ஏலம் ஒத்திவைப்பு
மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா; குட்டை திடல் ஏலம் ஒத்திவைப்பு
மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா; குட்டை திடல் ஏலம் ஒத்திவைப்பு
ADDED : மார் 18, 2025 04:03 AM

உடுமலை, : தேர்த்திருவிழாவையொட்டி குட்டைத்திடலில், பொழுது போக்கு அம்சங்கள் அமைக்க நேற்று நடந்த ஏலம் வருவாய்த்துறையினரால் ஒத்தி வைக்கப்பட்டது.
உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, வரும் ஏப்., 1ல், நோன்பு சாட்டுதலுடன் துவங்குகிறது. திருவிழாவையொட்டி, வருவாய்த்துறைக்கு சொந்தமான குட்டைத்திடலில், பொழுதுபோக்கு அம்சங்கள், கடைகள் அமைக்க நேற்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஏலம் விடப்பட்டது.
கடந்தாண்டு, 99 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு குட்டைத்திடல் ஏலம் விடப்பட்டிருந்தது. இந்தாண்டு, அரசு விதிகளின்படி, குறைந்தபட்ச ஏலத்தொகையாக ஒரு கோடியே 9 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது.
ஏலத்தில் பங்கேற்போர், ஏல முன்வைப்பு தொகையாக 27 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் கட்ட வருவாய்த்துறையால் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. நேற்று காலை ஏலம் துவங்கியதும், ஒரு நபர் மட்டுமே ஏலத்தில் பங்கேற்றார். அந்நபரும், அரசு நிர்ணயித்த ஏலத்தொகையை குறைக்க வலியுறுத்தி மனு கொடுத்தார். இதையடுத்து, ஏலத்தை வருவாய்த்துறையினர் ஒத்தி வைத்தனர்.