/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கருப்புக்கொடி ஏற்றிய மார்க்கெட் வணிகர்கள்
/
கருப்புக்கொடி ஏற்றிய மார்க்கெட் வணிகர்கள்
ADDED : மார் 24, 2025 05:40 AM

பல்லடம் : பல்லடம் அனைத்து வணிகர் சங்க தினசரி மார்க்கெட் கிளை சார்பில், ஆலோசனைக்கூட்டம், தினசரி மார்க்கெட் வளாகத்தில் நடந்தது.
அதன் தலைவர் ரங்கராஜ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் தங்கராஜ், சுரேஷ், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாவட்ட ஆலோசகர் அண்ணாதுரை பேசினார்.
வியாபாரிகள் கூறுகையில், ' நகராட்சி தினசரி மார்க்கெட்டில் இடிக்கப்பட்ட கடைகளில் வியாபாரம் செய்து வரும் வணிகர்களுக்கு டேவணித்தொகை மற்றும் அட்வான்ஸ் ஆகியவை, கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கப் படவில்லை.
என்.ஜி.ஆர்., ரோட்டில், எவ்வித அனுமதியும் இன்றி, வாடகை செலுத்தாமல், சிலர் கடைகள் நடத்தி வருகின்றனர்.
இவ்வாறான கடைகள் பெருகி வருவதால், மாத வாடகை, ஜி.எஸ்.டி., தொழில்வரி செலுத்தி வியாபாரம் செய்து வரும் வணிகர்களுக்கு வியாபாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. வியாபாரம் செலுத்த முடியாத சூழலில், நகராட்சி நிர்வாகம் கடைகளை பூட்டி 'சீல்' வைக்கிறது.
தினசரி மார்க்கெட் வியாபாரிகளுக்கு, குடிநீர், கழிப்பிடம், குப்பைகளை தினசரி அகற்றுவது என, எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை' என்றனர்.
முன்னதாக, நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, வியாபாரிகள், கடைகளில் கருப்புக் கொடி ஏற்றி வைத்தனர்.
நகராட்சி நிர்வாக நடவடிக்கை தொடர்பாக, மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.