ADDED : டிச 23, 2024 11:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருமாநல்லுாரில் பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது.
கோவில் வளாகத்தில் திருமண மண்டபம் கட்ட அறநிலையத்துறை சார்பில், 5.40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அடிக்கல் நாட்டு விழா கடந்த மாதம் நடந்தது. மொத்தம் 26 சென்ட் இடத்தில், கீழ் தளத்தில் உணவுக்கூடம், முதல் தளத்தில் 300 பேர் அமரக்கூடிய வகையில் திருமணக்கூடம், லிப்ட் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்படுகிறது. கட்டுமானப்பணி முழுவீச்சில் நடக்கிறது. கட்டுமான பணி 18 மாதத்தில் நிறைவு பெறும்.