நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, என்.எஸ்.எஸ்., அலகு - -2 சார்பில், காந்திக்கு மலர்துாவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
மாணவ பிரதிநிதி சுந்தரம் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வரலாற்று துறை பேராசிரியர் சக்தி செல்வம் பேசினார். மாணவ செயலர்கள் செர்லின், மதுகார்த்திக், கவியரசு, கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மாணவர்கள் மலர்துாவி அஞ்சலி செலுத்தினர். கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், நாட்டு நலப்பணித்திட்ட அலகு - -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.