/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருமுருகநாத சுவாமி கோவிலில் 24, 25ல் மாசி மகத் தேரோட்டம்
/
திருமுருகநாத சுவாமி கோவிலில் 24, 25ல் மாசி மகத் தேரோட்டம்
திருமுருகநாத சுவாமி கோவிலில் 24, 25ல் மாசி மகத் தேரோட்டம்
திருமுருகநாத சுவாமி கோவிலில் 24, 25ல் மாசி மகத் தேரோட்டம்
ADDED : பிப் 13, 2024 12:33 AM
திருப்பூர்;சுந்தரமூர்த்திநாயனாருடன், சிவபெருமான் வேடுபறி திருவிளையாடல் நிகழ்த்திய, பாடல் பெற்ற திருத்தலம் மற்றும் கொங்கேழு சிவாலயங்களில் ஒன்றானதுமாக விளங்குகிறது திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில். மனநோய் நீக்கும் புனித தலமாக விளங்கும் பூண்டியில், மாசிமாதம் மக நட்சத்திரத்தில் தேர்த்திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது.
நடப்பாண்டு தேர்த்திருவிழா, வரும், 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முந்தைய நாள், கிராமசாந்தி நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும், 19ம் தேதி, சூரிய, சந்திர மண்டல காட்சி; 20ம் தேதி பூதவாகனம், சிம்ம வாகன காட்சி; 21ல் புஷ்ப விமான காட்சி; 22ல், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு மற்றும் ரிஷப வாகன காட்சி.
வரும் 23ம் தேதி திருக்கல்யாணம், யானை வாகனம் மற்றும் அன்ன வாகன காட்சிகள்; 24ம் தேதி அதிகாலை, திருமுருகநாதர் திருத்தேருக்கு எழுந்தருளுகிறார்; மாலை, 3:00 மணிக்கு தேர் வடம் பிடித்து, தேரோட்டம் நடக்க உள்ளது; 25ம் தேதி மாலை மீண்டும் வடம் பிடித்து, தேர்கள் நிலையை வந்தடைகின்றன.
குதிரை மற்றும் சிம்ம வாகன காட்சியும், தெப்பத்திருவிழாவும், 26ல் நடக்கிறது; சுந்தரருடன், எம்பெருமான் வேடுபறி திருவிளையாடல் நிகழ்த்திய வைபவம், 27ம் தேதி நடக்கிறது. வரும், 28ல் பிரம்ம தாண்டவ தரிசன காட்சியும், 29ம் தேதி மஞ்சள் நீர்விழாவும் நடைபெற உள்ளது.