ADDED : நவ 04, 2026 05:57 PM
திருப்பூர்: வரும் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதுடன், அமாவாசையும் சேர்ந்து வருவதால், திருப்பூரில் இன்று (நவ.,4) இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட்டில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டது.
தீபாவளிக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பே பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு சென்று விடுவர். இதனால், இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விற்பனை இருக்காது என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர். மேலும், தீபாவளி நாளில் அமாவாசை என்பதால் இறைச்சி விற்பனையும் குறைய வாய்ப்புள்ளது. இதனால், இன்று அதிகாலை முதலே இறைச்சி கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது.
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் விற்பனை அதிகமாக இருக்கும். அதற்கு மாறாக புதன்கிழமைகளில் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டிலும் ஓரளவு விற்பனை நடைபெறும். அந்த வகையில், இன்று மீன் வாங்குவதற்கும் வழக்கத்தை விட சற்று அதிகமானோர் வந்திருந்தனர்.
