ADDED : ஜூலை 23, 2026 04:32 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்: தேசிய வேளாண் சந்தை (இ--நாம்) திட்டம் மற்றும் பொருளீட்டு கடன் திட்டங்களை பயன்படுத்தி விவசாயிகள், வியாபாரிகள் பயன்பெறலாம் என திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட நிர்வாகம் அறிவித்துள்ளது. 'இ - -நாம்' திட்டத்தின் மூலம் விவசாய விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதுடன், தொகை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.
மேலும், விளைபொருட்களை ஆறு மாதங்கள் வரை குறைந்த வாடகையில் இருப்பு வைத்து, அதன் அடிப்படையில் விவசாயிகளுக்கு 5 சதவீத வட்டியில் 5 லட்சம் ரூபாய் வரையும், வியாபாரிகளுக்கு 9 சதவீத வட்டியில் 2 லட்சம் ரூபாய் வரையும் பொருளீட்டு கடன் வழங்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
