ADDED : பிப் 14, 2024 11:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய மாதர் தேசிய சம்மேளன, திருப்பூர் புறநகர் மாவட்ட குழு கூட்டம், காட்டன் மில் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.
மாவட்ட தலைவர் சித்ரா தலைமை வகித்தார். செயலாளர் நதியா உள்ளிட்டோர் பேசினர். மக்களை சந்தித்து, பிரசார இயக்கம் நடத்தி, துண்டு பிரசுரங்கள் வினியோகிப்பது; 16ம் தேதி நடக்கும் விவசாய ஐக்கிய முன்னணியின், சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்பது; மகளிர் உரிமை திட்டத்தில், விடுபட்ட தகுதியான மகளிரை இணைத்தல்; மக்களை சந்திக்கும் போது, பொது பிரச்னைகள் குறித்து மனுக்களை பெற்று, கலெக்டரிடம் ஒப்படைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

