/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி மாணவர்களுக்கு கணித திறனறிதல் தேர்வு
/
பள்ளி மாணவர்களுக்கு கணித திறனறிதல் தேர்வு
ADDED : டிச 10, 2024 11:37 PM
உடுமலை; தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கணித திறனறிதல் தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கணித திறனறிதல் தேர்வு 2025 ஜன., மாதம் நடக்கிறது. ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்கலாம்.
உடுமலை சுற்றுப்பகுதியில், கலிலியோ அறிவியல் கழகத்தின் சார்பில் இத்தேர்வு நடக்கிறது. தேர்வுக்கு பதிவு செய்வதற்கு டிச., 18ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள், கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரானை 87782 01926 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.