ADDED : ஏப் 27, 2026 05:51 PM
அ நிறம் | அளவு
உடுமலை: மே தினத்தன்று நடைபெறும் கிராமசபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மே தின பேரணியும் நடைபெறாது.
ஒவ்வொரு ஆண்டும் மே தினத்தன்று ஊர்வலம், பேரணி நடைபெறுவது வழக்கம். இதில் தொழிற்சங்கங்கள் பங்கேற்கும்.
இந்த முறை, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், அரசு சார்பில் மே தினத்தில் நடக்கும் கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேதினத்தை முன்னிட்டு,தொழிற்சங்கங்கள் சார்பில், வழக்கமாக நடக்கும் வாகன ஊர்வலம், பேரணியும் தேர்தல் விதிமுறைகள் காரணமாக தடை ஏற்பட்டுள்ளது. பிரதான நகரங்களில் பொதுக்கூட்டம் மட்டும் நடத்த, தொழிற்சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.
