/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காங்கயம் காளை வளர்ப்பு எழுச்சி பெறட்டும்
/
காங்கயம் காளை வளர்ப்பு எழுச்சி பெறட்டும்
ADDED : ஜன 12, 2025 11:50 PM

காங்கயம் அடுத்த பழையகோட்டையில் காங்கயம் இன மாடுகளுக்கான சந்தை ஞாயிறுதோறும் நடக்கிறது. சந்தையில் காங்கயம் இன மாடுகள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது. இடைத்தரகர் இல்லாத சந்தை என்பதால் விவசாயிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
வாரந்தோறும் ஞாயிற்று கிழமை நடக்கும் சந்தையில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து விற்பனைக்காக விவசாயிகள் மாடுகளை கொண்டு வருகின்றனர். பலரும் மாடுகளை வாங்கவும் வருகின்றனர். குறிப்பாக, மாடுகளை விற்க, வாங்குபவர்கள் நேரடியாக விவசாயிகளே விலை நிர்ணயித்து கொள்கின்றனர்.
நேற்று காங்கயம் இன மாடுகள் 25 ஆயிரம் முதல் 74 ஆயிரம் ரூபாய் வரை விற்றது. மொத்தம் ரூ.15 லட்சத்துக்கு விற்பனை நடந்தது.
பொங்கல் பண்டிகையொட்டி சந்தையில், முன்னதாகவே பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். பங்கேற்ற மாடுகளுக்கு கொம்பு கயிறு இலவசமாக வழங்கப்பட்டது. அவர்களுக்கு சர்க்கரை பொங்கல், சுண்டல், தயிர் சாதம் உள்ளிட்டவை விவசாயிகளுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோ-பூஜை நடந்தது. மாடுகளுக்கு தேவையான உபகரணங்களை விவசாயிகள் வாங்க கடைகளில் திரண்டனர்.
''காங்கயம் காளைகள் வளர்ப்பை மீண்டும் எழுச்சிபெறச் செய்கிறது இந்த சந்தை'' என்று கூறுகின்றனர் விவசாயிகள்.