/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வரி உயர்வை குறைக்க வேண்டும்! மாநகராட்சியை வலியுறுத்தும் ம.தி.மு.க.,
/
வரி உயர்வை குறைக்க வேண்டும்! மாநகராட்சியை வலியுறுத்தும் ம.தி.மு.க.,
வரி உயர்வை குறைக்க வேண்டும்! மாநகராட்சியை வலியுறுத்தும் ம.தி.மு.க.,
வரி உயர்வை குறைக்க வேண்டும்! மாநகராட்சியை வலியுறுத்தும் ம.தி.மு.க.,
ADDED : ஜூலை 01, 2025 11:47 PM
திருப்பூர்; திருப்பூர், ஹார்வி குமாரசாமி மண்டபத்தில், ம.தி.மு.க., கோவை மண்டல செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மாநில அவைத் தலைவர் அர்ஜூனராஜ், தலைமை வகித்தார். திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் நாகராஜ் வரவேற்றார். கட்சியின், 16 மாவட்ட செயலர்கள் முன்னிலை வகித்தனர். கட்சி பொது செயலர் வைகோ, முதன்மை செயலாளர் துரை வைகோ, பொருளாளர் செந்திலதிபன் ஆகியோர் பேசினர்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட, 17 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, மத்திய அரசை கண்டித்து, வரும், 9ம் தேதி தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருக்கும் அகில இந்திய ஸ்டிரைக் மற்றும் மறியல் போராட்டத்துக்கு ஆதரவு தருவது.
திருப்பூர் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் படுக்கை வசதி ஏற்படுத்தி, செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். திருப்பூர் நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உயர்மட்ட பாலம் உள்ளிட்ட தொலைநோக்கு திட்டங்கள் செயல்படுத்த வேண்டும்.
கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை, திருப்பூர் வரை நீட்டிக்க வேண்டும்.அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளை இணைக்க வேண்டும். பெருமாநல்லுாரில் கடந்த, 1970ல் மின் கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் உயிர்த்துறந்த விவசாயிகளுக்கு, மாநில அரசின் சார்பில் மணி மண்டபம் எழுப்ப வேண்டும். திருப்பூர் மாநகராட்சியில் உயர்த்தப்பட்ட சொத்து வரி, தொழில் வரியை குறைக்க வேண்டும்.
தொழில் துறையினருக்கு, இயந்திர முதலீடுக்கு மானியம் வழங்க வேண்டும். மாநகராட்சியில் குப்பை அள்ளும் பணி மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தினர், தொழிலாளர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்குகின்றனர்.
துாய்மைப் பணியளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் வழங்க வேண்டும். கதர் கிராம கைத்தறி நெசவு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.