/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
17 பேருக்கு செயற்கை கால்கள் அளவீடு
/
17 பேருக்கு செயற்கை கால்கள் அளவீடு
ADDED : மே 12, 2025 03:51 AM

திருப்பூர்; திருப்பூர் மாவட்ட சக் ஷம் அமைப்பு சார்பில், மாதாந்திர தொடர் நிகழ்ச்சியாக நடத்தப்பட்டு வரும் மாற்றுத்திறனாளர்களுக்கான இலவச செயற்கை கால்கள் அளவீடு முகாம் மற்றும் மகான் சூர்தாசர் ஜெயந்தி நிகழ்ச்சி, திருப்பூர், மங்கலம் ரோட்டில் உள்ள ஸ்ரீ செல்வவிநாயகர் கோவில் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
செயற்கை கால்கள் கேட்டு விண்ணப்பித்திருந்த, 17 நபர்களுக்கு அளவீடுகள் செய்யப்பட்டன. பூச்சக்காடு தம்பி நண்பர்கள் நற்பணி மன்றத்துடன் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம், இலவச ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் கண்டறியும் பரிசோதனை முகாம் நடந்தது.
'சக் ஷம்' மாவட்ட தலைவர் ரத்தினசாமி தலைமை தாங்கினார். செயலாளர் தமிழ்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.