/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தடை மீறி செயல்பட்ட இறைச்சிக் கடைகள்
/
தடை மீறி செயல்பட்ட இறைச்சிக் கடைகள்
ADDED : ஏப் 10, 2025 11:44 PM

திருப்பூர்; தடையை மீறி செயல்பட்ட இறைச்சி கடைகள் மீது நடவடிக்கை எடுத்து, 500 கிலோ இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நேற்று மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு, இறைச்சி கடைகளில் ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை வதை செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.
திருப்பூர் மாநகராட்சி பகுதியிலும், இறைச்சி கடைகள் இயங்கவும், இறைச்சி விற்பனை செய்யவும் தடை விதித்து அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த தடையை மீறி ெசயல்படும் கடைகள் குறித்து மாநகராட்சி சுகாதாரப் பிரிவினர் நேற்று பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது, கொங்கு மெயின் ரோடு, பி.என்., ரோடு ஆகிய பகுதிகளில் 15 கடைகளில் இறைச்சி விற்பனை நடப்பது தெரிய வந்தது.
அக்கடைகளிலிருந்து 500 கிலோ எடையுள்ள இறைச்சியை பறிமுதல் செய்து, பினாயில் ஊற்றி அழித்த அலுவலர்கள் கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.
ஊரகப்பகுதிகளில் விற்பனை
மாநகராட்சி பகுதிகளில் சுகாதார பிரிவினர் கண்காணிப்பு இருந்த நிலையிலும், ஊரக பகுதிகளில் இறைச்சி விற்பனை குறித்து எந்த எச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு இல்லை. இதனால், கிராமப் பகுதிகளில் வழக்கம் போல் இறைச்சி கடைகள் இயங்கின.