/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆற்றங்கரையோரம் இறைச்சிக்கழிவுகள்
/
ஆற்றங்கரையோரம் இறைச்சிக்கழிவுகள்
ADDED : ஆக 07, 2025 11:07 PM

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள இறைச்சிக்கடைகளில், கழிவுகள் அப்புறப்படுத்துவது குறித்த தெளிவான வழிகாட்டுதல் இல்லை. சுகாதாரப்பிரிவு அறிவுரைகளை, இறைச்சிக்கடைகள் கண்டுகொள்வதும் இல்லை. கோழி இறைச்சிக்கடை நடத்துவோர், பெரிய 'டிரம்'களில் கழிவு நிரம்பியதும், அப்படியே திறந்தவெளியில் கொட்டுகின்றனர். இரவு நேரம் கழிவுகளை கொண்டு சென்று, ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளில் கொட்டுகின்றனர்.
இறைச்சிக்கழிவு கொட்டும் பகுதிகளில், தெருநாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நல்லுார், ஊத்துக்குளி ரோடு சுற்றுப்பகுதிகளில் இயங்கும் இறைச்சிக்கடைகள், காசிபாளையம் அருகே, முதலிபாளையம் ரோட்டில், நொய்யல் ஆற்றோரமாக கழிவுகளை கொட்டி வருகின்றனர். தெருநாய்கள் பரப்பி விடுவதால், ஆற்றுக்குள் கழிவுகள் கலந்துவிடுகின்றன. முதலிபாளையம், சிட்கோ, தாட்கோ செல்லும் நபர்களை, தெருநாய்கள் துரத்தும் அபாயமும் உள்ளது. நொய்யல் கரையோரம், இறைச்சிக்கழிவுகள் கொட்டுவதை, மாநகராட்சி நிர்வாகம் தடுக்க வேண்டும்.