/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பதக்கங்கள் 'சுட்ட' அபாகஸ் பள்ளி
/
பதக்கங்கள் 'சுட்ட' அபாகஸ் பள்ளி
ADDED : அக் 29, 2024 12:16 AM

திருப்பூர்: திருப்பூர் அபாகஸ் சர்வதேச மாண்டிசோரி பள்ளியில், கோவை சகோதயா சார்பில் 45வது துப்பாக்கிச் சுடும் போட்டி நடந்தது.
பள்ளிச்செயலாளர் சுரேஷ் பாபு, நிர்வாக இயக்குனர் அப்னா சுரேஷ் பாபு, முதல்வர் டாக்டர் ராஜிவ் ரிஷி, மங்கலம் பள்ளி பயிற்சியாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவற்றில் பங்கேற்ற அபாகஸ் பள்ளி மாணவர்கள் பதக்கங்களை குவித்தனர். தனிநபர் கைத்துப்பாக்கி சுடுதலில் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஐந்தாம் வகுப்பு மாணவர் சிரிஷ் மூன்றாம் இடமும், 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் பத்தாம் வகுப்பு மாணவர் அதிஸ் மூன்றாம் இடமும் பிடித்தனர். குழு கைத்துப்பாக்கி சுடுதலில் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஏழாம் வகுப்பு மாணவர்கள் ஸ்ரீராம் கிருஷ்ணா இளஞ்சியன், ஐந்தாம் வகுப்பு மாணவர் சிரிஷ் ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்தனர்.
19 வயதுக்குட்பட்டோர் பிரில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஆதிஸ், ஜெகத், சுமேஷ் ஆகியோர் இரண்டாம் பிடித்தனர். குழு ரைபிள் பீப் சைட் போட்டியில் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஐந்தாம் வகுப்பு மாணவர் கிரிஷிவ், ஆறாம் வகுப்பு மாணவர்கள் ஸ்ரீவின், ஜெயராம் ஆகியோர் மூன்றாம் இடம் பிடித்தனர்.
17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் முகமது அக்ரம், யஷ்வந்த், பத்தாம் வகுப்பு மாணவர் நகுலன் ஆகியோர் மூன்றாமிடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.