ADDED : மார் 18, 2024 12:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;லோக்சபா தேர்தலையொட்டி, திருப்பூர் மாவட்ட நிர்வாகம், வேட்பாளரின் தேர்தல் விளம்பரங்களை பார்வையிடுவதற்காக, கலெக்டர் அலுவலக தரைதளத்தில், 'மீடியா சென்டர்' அமைக்கப்பட்டுவருகிறது.
எட்டு 'டிவி'க்கள் வைக்கப்பட்டு, கேபிள் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு 'டிவி'யிலும் மூன்று சேனல் வீதம், ஒரே நேரத்தில், 24 சேனல்களை பார்வையிடும்வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

