sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஏப்ரல் 01, 2026 ,பங்குனி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு நாளை மருத்துவ மதிப்பீடு முகாம்

/

 மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு நாளை மருத்துவ மதிப்பீடு முகாம்

 மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு நாளை மருத்துவ மதிப்பீடு முகாம்

 மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு நாளை மருத்துவ மதிப்பீடு முகாம்


ADDED : ஜன 08, 2026 05:55 AM

Google News

ADDED : ஜன 08, 2026 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்கம் சார்பில், உடுமலை ஒன்றியத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நாளை நடக்கிறது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, -உள்ளடக்கிய கல்வி, திருப்பூர் மாவட்டம் சார்பாக, உடுமலை ஒன்றிய மாற்றுத்திறன் கொண்ட, பிறப்பு முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கான, ​மருத்துவ மதிப்பீட்டு முகாம், நாளை (9ம் தேதி) உடுமலை ராஜேந்திரா ரோட்டிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது.

இதில், ​மருத்துவ சான்றிதழ் வழங்குதல், ​தேசிய அடையாள அட்டைக்கான பதிவு மற்றும் புதுப்பித்தல், ​தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டைக்கான பதிவு மற்றும் ஆலோசனை, ​இலவச ரயில் மற்றும் பஸ் பயணச் சலுகைக்கான அட்டை, மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான ​உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான பதிவு மற்றும் ​உதவித் தொகைக்கான பதிவு செய்யப்படுகிறது.

மேலும், ​குழந்தைகள் நல டாக்டர்கள், ​மனநலம், ​எலும்பு மூட்டு, ​காது, மூக்கு, தொண்டை, ​கண் என சிறப்பு பிரிவு டாக்டர்கள் பங்கேற்கும் ஆலோசனைகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் வழங்குகின்றனர்.

அன்னப்பிளவு அறுவை சிகிச்சைக்கான ஆலோசனை, முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சைக்கான பதிவு உள்ளிட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான அனைத்து சேவைகளும், இம்முகாமில் வழங்கப்படுகிறது.

எனவே, மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் மற்றும் பெற்றோர், பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, போட்டோ- 4 ஆகிய ஆவணங்களுடன் பங்கேற்குமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us