/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம்
/
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம்
ADDED : பிப் 05, 2025 11:32 PM

உடுமலை: உடுமலை வட்டாரத்தில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது.
உடுமலை வட்டாரம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுந்தரி மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்.
மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் வசந்தராம்குமார் முன்னிலை வகித்தார். முகாமில் அறிவுசார் குறைபாடுள்ளவர்கள் 71 பேர், உடல் இயக்க குறைபாடுள்ளவர்கள் 48 பேர், பார்வை குறைபாடு 17 பேர், செவித்திறன் குறைபாடு கொண்டவர்கள் 16 பேர் பங்கேற்று பரிசோதனை செய்துகொண்டனர். புதிய அடையாள அட்டை, 40 பேருக்கு வழங்கப்பட்டது. தேசிய அடையாள அட்டை 20 நபர்களுக்கு புதுப்பிக்கப்பட்டது. இரண்டு மாற்றுத்திறன் மாணவர்களுக்கு, உபகரணங்கள் வழங்கப்பட்டன.
டாக்டர்கள் சுகன்யாதேவி, முகமதுபாசில் சிகிச்சை அளித்தனர். முகாமில் வட்டார கல்வி அலுவலர் ஆறுமுகம், மேற்பார்வையாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு பயிற்றுநர்கள் முகாமை ஒருங்கிணைந்தனர்.