/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துாய்மை பணியாளருக்கு மருத்துவ முகாம்
/
துாய்மை பணியாளருக்கு மருத்துவ முகாம்
ADDED : செப் 27, 2024 11:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெள்ளகோவில்: வெள்ளகோவில் நகராட்சி மற்றும் ஆர்த்தோ லைப் மருத்துவமனை இணைந்து துாய்மை பணியாளர்களுக்கு இந்த சிறப்பு மருத்துவ முகாமை நடத்தின.
முகாமுக்கு நகராட்சி தலைவர் கனியரசி முத்துக்குமார், நகராட்சி கமிஷனர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தனர். இதில் மருத்துவ குழுவினர் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனர். முகாமில், 110 பேருக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், உடல் வலி, ஆஸ்துமா, இதய நோய் மற்றும் இதர உடல் உபாதைகள் குறித்து பரிசோதனை செய்து மருந்துகள் வழங்கப்பட்டது.
துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ், துப்புரவு மேற்பார்வையாளர்கள் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.