ADDED : செப் 29, 2024 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்: பொங்கலுார் ஒன்றியம், மசநல்லாம்பாளையம் பள்ளியில் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
பொங்கலுார் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் குமார் துவக்கி வைத்தார். அதில், மருத்துவ பெட்டகம், ஊட்டச்சத்து பெட்டகம், சஞ்சீவி பெட்டகம், கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது. முகாமில், 820 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
ஒன்றிய குழு துணைத் தலைவர் அபிராமி, தொங்குட்டிபாளையம் ஊராட்சி தலைவி பிரியா, துணைத் தலைவி பத்மா,ல கவுன்சிலர்கள் ஜோதிபாசு, பாலுசாமி, லோகு பிரசாத் உட்பட பலர் பங்கேற்றனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வரதராஜன் நன்றி கூறினார்.