நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரத்தில் பி.எஸ்ஜி., மருத்துவமனை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
தாராபுரம் நகர லயன்ஸ் கிளப், வி.எஸ்.என்.ஆறுச்சாமி அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து பி.எஸ்.ஜி., மருத்துவமனை சார்பில் பொதுமருத்துவ முகாம் நடந்தது.
லயன்ஸ் கிளப் தலைவர் சிவகுமார் தலைமை வகித்து முகாமைத் துவக்கி வைத்தார். அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
இதில் பொது மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், கண், தோல், எலும்பு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் மருத்துவர் குழு சிகிச்சை அளித்தது. இதில் நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.