நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மாநகர போலீசார் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, டிரைவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மருத்துவ பரிசோதனை நடந்தது. தெற்கு சரக போலீஸ் துணை கமிஷனர் வனிதா தலைமை வகித்து, டிரைவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு செய்தார். இதையடுத்து, டிரைவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. போலீசார், டிரைவர் உட்பட பலர் பங்கேற்றனர். கூடுதல் துணை கமிஷனர் மனோகரன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன், சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.