/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மருத்துவ மலர் - கிருத்திகா மருத்துவமனை குழந்தையின்மை, கர்ப்பபை சிகிச்சை; கிருத்திகா மருத்துவனையில் 6ல் சிறப்பு முகாம்

UPDATED : ஜூலை 01, 2025 07:50 AM
ADDED : ஜூலை 01, 2025 12:21 AM
திருப்பூர், கிருத்திகா மருத்துவமனை சார்பில், குழந்தையின்மை மற்றும் கர்ப்ப பை சிகிச்சை தொடர்பாக மெகா இலவச மருத்துவ முகாம், வரும், 6ம் தேதி, திருப்பூர், மங்கலம் சாலை, கருவம்பாளையத்தில் உள்ள கிருத்திகா மருத்துவமனையில் நடக்கிறது.
இது குறித்து, மருத்துவமனை டாக்டர் கிருத்திகா ஆனந்தராஜ் கூறியதாவது:
வரும், 6ம் தேதி சிறப்பு மருத்துவ முகாமில் இலவசமாக ஸ்கேன், கருத்தரித்தல் ஆலோசனை, விந்து பரிசோதனை மேற்கொள்ளப்படும். முகாமில் பதிவு செய்து, தேவைப்படுவோருக்கு குறைந்த செலவில் ஐ.யு.வி., ஐ.வி.எப்., மற்றும் ஐ.சி.எஸ்.ஐ., முறையில் கருத்தரிப்பு மேற்கொள்ளப்படும். கிருத்திகா மருத்துவமனை, திருப்பூரில் முதல் முறையாக ஐ.சி.எஸ்.ஐ., மற்றும் 'விட்ரிபிகேஷன்' முறைகளில் வெற்றிகரமாக கருத்தரிப்பு செய்த மையம்; முதன் முறையாக வாடகை தாய் முறையிலும், கடந்த, 20 ஆண்டுகளில், 1,000க்கும் மேற்பட்ட தம்பதிகளுக்கு குழந்தை செல்வம் கிடைக்க ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கிய பெருமை எங்களுக்குண்டு.
ஆண் மலட்டுத்தன்மைக்கு சிகிச்சை, கருமுட்டை மற்றும் விந்து தானம், விந்து உறைநிலை வசதி, அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுவதை தடுக்கும் வழிமுறை, லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை, கர்ப்ப பை மற்றும் சினைப்பை கட்டி நீக்குதல், ஸ்கேன், விந்து பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு, சரியான மருத்துவம் பரிந்துரைக்கப்படுகிறது. விவரங்களுக்கு, 99443-21077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.