/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மருத்துவ காப்பீடு திட்டம் ஓய்வுபெற்ற போலீஸ் எதிர்பார்ப்பு
/
மருத்துவ காப்பீடு திட்டம் ஓய்வுபெற்ற போலீஸ் எதிர்பார்ப்பு
மருத்துவ காப்பீடு திட்டம் ஓய்வுபெற்ற போலீஸ் எதிர்பார்ப்பு
மருத்துவ காப்பீடு திட்டம் ஓய்வுபெற்ற போலீஸ் எதிர்பார்ப்பு
ADDED : செப் 27, 2024 11:34 PM
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்க, 13வது ஆண்டு துவக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
திருப்பூர் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெயராம், பொருளாளர் முருகேசன் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் குணசேகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். முன்னாள் எஸ்.பி., மற்றும் டி.எஸ்.பி.,க்கள் உள்ளிட்டோர் பேசினர்.
கூட்டத்தில், கேரள மாநிலத்தில் நடைமுறையில் உள்ளது போன்று, முன்னாள் போலீசார் உயிரிழந்தால், அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும்.
அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவ காப்பீடு திட்டத்தில் முழுமையாக மருத்துவம் வழங்க வேண்டும். அரசு ஊழியர்கள் போன்று ஓய்வு பெற்றோருக்கும் அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும்.
திருப்பூர் மாவட்ட சங்கத்தின் பயன்பாட்டுக்காக மாவட்ட மற்றும் மாநகர போலீஸ் அலுவலகத்தில் அறை ஒதுக்க வேண்டும். எழுபது வயதுடையோருக்கு 10 சதவீதம் கூடுதல் பென்சன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.