/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாரந்தோறும் உறுப்பினர் சேர்க்கை; நாம் தமிழர் கட்சியில் தீவிரம்
/
வாரந்தோறும் உறுப்பினர் சேர்க்கை; நாம் தமிழர் கட்சியில் தீவிரம்
வாரந்தோறும் உறுப்பினர் சேர்க்கை; நாம் தமிழர் கட்சியில் தீவிரம்
வாரந்தோறும் உறுப்பினர் சேர்க்கை; நாம் தமிழர் கட்சியில் தீவிரம்
ADDED : ஜூலை 04, 2025 11:09 PM
திருப்பூர்; அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், ஒவ்வொரு அரசியல் கட்சியினரும், தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகின்றன.
வழக்கம் போல், தனித்தே களம் காண்பது என்ற முடிவுடன் தேர்தலை எதிர்கொண்டுள்ள நாம் தமிழர் கட்சி, வேட்பாளர் அறிவிப்பிலும் முந்திக் கொண்டுள்ளது.
அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கோபி செட்டிபாளையம் வேட்பாளராக சீதாலட்சுமி என் பவரை அறிவித்து, வேட்பாளர் அறிவிப்பை ஏற்கனவே துவக்கி வைத்து விட்டார், வேட்பாளர் சீதாலட்சுமி, சுவர் விளம்பரம், சுவரொட்டி விளம்பரத்தில் தற்போதே ஈடுபட துவங்கிவிட்டார். இதற்கிடையில், திருப்பூர் நகரிலும் தேர்தலை முன்னிட்டு, உறுப்பினர் சேர்க்கைப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கட்சியினர் கூறுகையில், 'பொதுவாக மாதம் ஒருமுறை உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட்டு வந்த நிலையில், வரும் நாட்களில் வாரந்தோறும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்படும்; கடந்த வாரம் நடந்த முகாமில், 150 பேர் கட்சியில் இணைந்தனர்; இளைஞர்கள் தான் கட்சியில் அதிகளவில் இணைவர் என பொதுவான பார்வையை கடந்து, 50 வயதுக்கு மேற்பட்ட பலரும் கட்சியில் இணைகின்றனர்' என, கட்சியினர் தெரிவித்தனர்.