ADDED : செப் 25, 2026 06:53 PM
அ நிறம் | அளவு
திருப்பூர், செப். 26–
திருப்பூர், பி.என். ரோடு, கூத்தம்பாளையம் பிரிவு, ஜெ.பி. நகரில் உள்ள முருகு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், எளிய படிப்பு முறைகள் மற்றும் நினைவாற்றல் திறனை மேம்படுத்தும் பயிற்சி நிகழ்ச்சி கடந்த 24-ம் தேதி நடைபெற்றது.
‘தேர்ட் ஐ மெமரி எம்பவர்மென்ட்’ நிறுவனரும், தமிழ்நாடு நினைவாற்றல் விளையாட்டு மன்றத்தின் தலைமைப் பயிற்சியாளருமான ரிஷி கேசவன், அறிவியல் பூர்வமான எளிய படிப்பு முறைகள் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் குறித்து, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். மாணவர்கள் படிப்பை எளிதாகப் புரிந்துகொண்டு நினைவில் வைத்துக்கொள்ளும் முறைகள் குறித்து விளக்கப்பட்டது. பள்ளி தாளாளர் பசுபதி, முதல்வர் சசிகலா ஆகியோர் பயிற்சியாளர் ரிஷி கேசவனை பாராட்டினர்.
