மெர்ச்சன்டைசிங் பயிற்சி 16ம் தேதி வகுப்பு துவக்கம்
மெர்ச்சன்டைசிங் பயிற்சி 16ம் தேதி வகுப்பு துவக்கம்
UPDATED : செப் 07, 2026 10:07 PM
ADDED : செப் 07, 2026 09:32 PM
திருப்பூர்:திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே, எம்.ஜி. புதுார் முதல் வீதியில் நிஷாந்த் இன்ஸ்டிடியூட் ஆப் கார்மென்ட் டெக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு, மெர்ச்சன்டைசிங் பயிற்சி வகுப்புகள் வரும் 16-ம் தேதி துவங்குகின்றன.
பின்னலாடை தயாரிப்பில், நுால் மற்றும் துணி தேவையை துல்லியமாக கணக்கிடுதல், சரியான அளவில் நிட்டிங் செய்தல், டையிங், பிரின்டிங் தொழில்நுட்பங்கள், திட்டமிடுதல், ஏற்றுமதி ஆவணங்கள் தயாரித்தல், துல்லியமான விலை நிர்ணயம், வெளிநாட்டு வர்த்தகர்களுடன் தொடர்பு, தர நிர்ணயம், ஏ.க்யூ.எல்., தர சோதனை மற்றும் பேட்டர்ன் உள்ளிட்ட அனைத்து பின்னலாடை தொழில்நுட்பங்களும் பயிற்சியில் கற்றுத்தரப்படுகின்றன.
காலையில் பகுதி நேரமாகவும், பகலில் முழு நேரமாகவும் பின்னலாடை நிறுவனங்களில் செயல்விளக்கத்துடன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு, 98427 93499 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
