/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மின்சாரம் இன்றி மீட்டர் ஓட்டம்; திருப்பூர் விவசாயி 'ஷாக்'
/
மின்சாரம் இன்றி மீட்டர் ஓட்டம்; திருப்பூர் விவசாயி 'ஷாக்'
மின்சாரம் இன்றி மீட்டர் ஓட்டம்; திருப்பூர் விவசாயி 'ஷாக்'
மின்சாரம் இன்றி மீட்டர் ஓட்டம்; திருப்பூர் விவசாயி 'ஷாக்'
ADDED : ஆக 26, 2025 11:40 PM

திருப்பூர்; திருப்பூரை சேர்ந்த விவசாயி ஒருவருக்கு, வீட்டு மின் கட்டணம் 61 ஆயிரம் ரூபாய் செலுத்துமாறு வந்த அறிவிப்பால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
திருப்பூர், பூம்புகார் கிழக்கு, செல்வபுரத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியம், விவசாயி. இவரது வீட்டு மின் இணைப்புக்கு சராசரியாக, 200 முதல் 300 யூனிட் வரை மின்சாரம் பயன்பாடு ஏற்படும். மின் கட்டணம் 600 ரூபாய் முதல் செலுத்துவார்.
நடப்பு மாதம், 5,437 யூனிட்டுகள் பயன்படுத்தியதாகவும், 61 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தவும் பில் வந்துள்ளது.இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து மின் வாரிய ஊழியர்களிடம் கேட்ட போது, 'புளூடூத் டிவைசில்' மின் கணக்கீடு செய்ததால் ஏதேனும் தவறு நேர்ந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
சந்தேகமடைந்த அவர் மின் இணைப்பை சோதனை செய்தார். மின் சப்ளையை நிறுத்தி, பியூஸ் கேரியர்களை அகற்றிய பின்னரும் கூட மீட்டர் சுழன்று யூனிட் கணக்கு ஏறத்துவங்கியது.
ஏறத்தாழ ஒரு மணி நேரத்தில், 40 யூனிட் அளவு மின் சப்ளையே இல்லாமல் மீட்டர் ஓடியுள்ளது. இதனையடுத்து, அவர் இது குறித்து மின் வாரியத்துக்கு கடிதம் அளித்தார்.
இதேபோல், அதே பகுதியைச் சேர்ந்த 'சிங்கிள் பேஸ்' மின் இணைப்பு உள்ள ஒற்றை அறை கொண்ட வீட்டுக்கு, 12 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளது. இது வரை அதிகபட்சமாக ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே கட்டணமாக வந்துள்ள இந்த இணைப்புக்கு 12 ஆயிரம் மின் கட்டணம் என்பது அதிர்ச்சி அளித்துள்ளது.
இது குறித்து மின் வாரியத்தினர் கூறுகையில், 'புளூடூத் டிவைஸ்' வாயிலாக மின் கணக்கீடு செய்வதால் இதுபோல் தவறு நேர்ந்திருக்கலாம். இருப்பினும் வாடிக்கையாளர் மின் மீட்டரையும் சரி செய்து அதில் ஏதேனும் பழுது இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்,' என்றனர்.