ADDED : ஆக 10, 2025 11:08 PM
அ நிறம் | அளவு
அனுப்பர்பாளையம்; திருப்பூர் மாவட்ட எம்.ஜி.ஆர்., பக்தர்கள் பேரவை சார்பில், எம்.ஜி.ஆர்., 108வது பிறந்த நாள் விழா திருமுருகன் பூண்டி விஸ்வாஸ் மஹாலில் நடந்தது. திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார். விஸ்வாஸ் மஹால் விஸ்வநாதன், முன்னிலை வகித்தார். எம்.ஜி.ஆர்., பக்தர்கள் பேரவை நிர்வாக குழு உறுப்பினர் தங்கமுத்து வரவேற்றார். மனித நேய இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி கலந்துகொண்டு மூத்த உறுப்பினர்களுக்கு ஷீல்டு மற்றும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பேசினார்.
சிலம்பாட்டம், ஓவிய போட்டி, பரதநாட்டியம் உள்ளிட்டவை நடைபெற்றது. 108 பேருக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.
