/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'சிட்டு'களின் சிறுசேமிப்பு வெள்ள காலத்துக்கு பேருதவி
/
'சிட்டு'களின் சிறுசேமிப்பு வெள்ள காலத்துக்கு பேருதவி
'சிட்டு'களின் சிறுசேமிப்பு வெள்ள காலத்துக்கு பேருதவி
'சிட்டு'களின் சிறுசேமிப்பு வெள்ள காலத்துக்கு பேருதவி
ADDED : ஜன 06, 2024 11:51 PM

கடந்த, 2018; கஜா புயல்... தமிழகத்தில் உள்ள, 13 கடலோர மாவட்டங்களை புரட்டி போட்ட நேரம்; தலைகால் புரியாமல், திக்குமுக்காடிய மக்கள் உடமைகளை இழந்தனர்; உணவு, உடை, இருப்பிடம் என, அடிப்படை தேவைகளே இல்லாமல் போன அவல நிலையில், மனிதம் நிறைந்த மக்கள், மாநிலம் முழுவதிலும் இருந்தும், தங்களுக்கு இயன்ற உதவிகளை அனுப்பி வைத்தனர்; பலர் நேரில் சென்றும் வழங்கினர்.
''டீச்சர்... அந்த மக்களுக்கு நாங்களும் ஏதாவது உதவி செய்யணும்ன்னு நினைக்கிறோம்...'' என்றனர்.அவிநாசி, சேவூர் அருகே, சாலைப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மழலைகள் தான், இப்படியாக தங்கள் ஆசிரியர்களிடம் கேட்கின்றனர்.
'உதவும் உள்ளங்களை ஊக்குவிப்பதும், அந்த மனப்பான்மையை வளர்த்து விடுவதும், கல்வியின் ஒரு அங்கம் தானே என்பதை உணர்ந்திருந்த ஆசிரியர்களும், வகுப்பறையில் உண்டியல் வைத்து சேமிக்கும், மாணவ, மாணவியரின் ஆர்வத்துக்கு தடை போடாமல், வழிகாட்டினார்கள்.
கிடைக்கும் சில்லரை காசுகளை உண்டியலில் சேமிக்க துவங்கினர் மாணவ, மாணவியர். 'மிக்ஜாம்' புயலில், பாதிக்கப்பட்ட சென்னை, துாத்துக்குடி மக்களுக்கு, சேமிக்கும் பணத்தை அனுப்ப முனைந்தனர் மாணவ, மாணவியர்.
சிறுக, சிறுக சேமித்த அந்த சிட்டுகளின் சேமிப்புத் தொகையுடன், பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களும் தங்களின் பங்களிப்பை வழங்கி, வெள்ள நிவாரணத்துக்கு அனுப்பி வைத்து, ஆத்ம திருப்தி அடைந்து கொண்டனர்.