/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மண் வளத்தை கூட்டி வரும் நுண் சத்துகள்
/
மண் வளத்தை கூட்டி வரும் நுண் சத்துகள்
ADDED : டிச 09, 2024 07:46 AM
உடுமலை : 'நுண் சத்துகள் மண் வளத்தை கூட்டி, விளைச்சலை பெருக்குகிறது' என, தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட மாவட்ட ஆலோசகர் அரசப்பன் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:
கடந்த, 1960களில் உணவு உற்பத்தி பெருக்க உரங்கள், நவீன உயர் விளைச்சல் ரகங்கள், பூச்சி மருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டு, விளைச்சல் அதிகரிக்கப்பட்டது.
உரங்கள் பயன்பாடு அதிகரிக்க, அதிகரிக்க தொடு உரங்கள் மற்றும் பசுந்தாள் உரங்களின் பசுந்தாள் உரங்களின் பயன்பாடு குறைந்துவிட்டது.
அதனால், மண்ணில் நுண் சத்துக்களான போரான், துத்தநாகம், இரும்பு, மாங்னீசு உட்பட, 16 வகை நுண் சத்து அளவு குறைந்துவிட்டது. மண் வளத்தை பெருக்கி, பயிர் விளைச்சலை அதிகரிக்க நுண்ணுாட்டச்சத்துகளை வேளாண்மை துறை, செயற்கையாக தயாரித்து, மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.
மத்திய, மாநில அரசு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், பயறுவகை பயிர்கள், தானியம் மற்றும் சிறுதானிய பயிர்கள் ஆகியவற்றின் விளைச்சலை அதிகரிக்கும் நுண்ணுாட்டச்சத்துகள், 50 சதவீதம் மானிய விலையில் வழங்கி வருகிறது. நுண் சத்துகள் மண் வளத்தை கூட்டி, விளைச்சலை பெருக்குகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், சாகுபடி செய்யப்படும் நெல், மக்காசோளம், சிறுதானியங்கள், பயறு வகைகள், தென்னை போன்ற பயிர்களுக்கு ஏற்ற நுண்ணுாட்ட உரம், அனைத்து வட்டார வேளாண்மை மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு, 50 சதவீதம் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.